Thursday , January 17 2019
Home / Tag Archives: ரெலோ

Tag Archives: ரெலோ

திருமலையில் இன்று கூடியது ரெலோவின் தலைமைக்குழு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் 27 உறுப்பினர்களைக் கொண்ட தலைமைக் குழுவின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் கூடியுள்ளது. சமகால அரசியல் நிலைமை, நேற்றுக் கூடிய அரசமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் யோசனைத் திட்டம் ஆகியவை உட்படப் பல விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்படுகின்றன என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம், நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு கல்முனையில் …

Read More »

ஒரு தரப்பை தீவிரமாக எதிர்த்துக்கொண்டு தமிழருக்கான தீர்வைக் காணவே முடியாது!

“சிங்களப் பேரினவாத அரசியல் அணிகள் இரண்டினதும் அதிகாரப் போட்டிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புகுந்து விளையாடுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற சிந்தனை நடைமுறைச் சாத்தியமானது அல்ல. இரண்டு பிரதான சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்களக் கட்சிகளில் ஒன்றைத் தீவிரமாக எதிர்த்தபடி தமிழர் தரப்பு அரசியல் தீர்வைப் …

Read More »

கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி: நடுநிலை வகியுங்கள்!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனவும், பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த வேண்டுகோளுக்கு இணங்கமாட்டோம் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தபோது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாவிட்டால் அதனை ஆதரிக்காமல் நடுநிலையாவது வகியுங்கள் எனவும் ஜனாதிபதி …

Read More »