Friday , January 18 2019
Home / Tag Archives: வன்னி

Tag Archives: வன்னி

வன்னியில் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு!

வன்னிப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையினாலும், குளங்கள் திறந்து விடப்பட்டதாலும், பாரிய வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால், முல்லைத்தீவு மாவட்டத்தில், மொத்தம் 3932 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில், 10,118 குடும்பங்களைச் சேர்ந்த 10,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,297 …

Read More »

மழை வெள்ளத்தில் மூழ்கியது பல கிராமங்கள் : கிளிநொச்சி (படங்கள் இணைப்பு)

மழை

கிளிநொச்சியில் நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு …

Read More »

சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பல கோடி ரூபாவைச் செல்வம் அடைக்கலநாதன் பெற்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாக கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஊடகமொன்றுக்கு …

Read More »

த. தே.கூ இருந்து வெளியேறி விட்டோம் சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் பொது அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மலைய மக்களின் சம்பளம் 1000 ரூபா வழங்கப்படவேண்டும் எனக்கோரி இடம்பெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கின் …

Read More »

பிரபாகரன் இறந்துவிட்டார்,போராட்டாம் மௌனித்து விட்டது, புலிகளின் நிதியை வன்னி மக்களுக்கு வழங்க வேண்டும் – அருட்தந்தை இம்மானுவேல்

தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் மௌனிக்கப்பட்டு விட்டது. ஈழப்போராட்டத்திற்காக புலம்பெயர்ந்த தேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதியை போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குங்கள் என கூறியுள்ளார் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார். யாழ் ஆயர் இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2009 உடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டாம் மௌனித்து விட்டது. பிரபாகரன் இறந்து விட்டார். போராட்டத்திற்காக புலிகள் புலம்பெயர் நாடுகளுடன் தொடர்புகளை …

Read More »

தேசியத்தை சிதைக்க மதச்சண்டைகள்:கஜேந்திரகுமார்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளமை திட்டமிட்டு சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு சதி முயற்சியேயென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் மஸ்தானின் நியமனத்திற்கு முன்னணி தனது வன்மையாக கண்டனத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். இந்த அரசு தமிழ் மக்களது அன்றாட பிரச்சினைகள் …

Read More »