Home / Tag Archives: America

Tag Archives: America

தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்?

சிரியா

சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்கு திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர போர் நிறுத்தத்தை வெளியிட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்காவிற்கு துணை நின்று போராடிய குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியதில் இதுவரை 637பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க உயர்மட்டக்குழு, துருக்கி உடனான பேச்சு வார்த்தையை தொடர்ந்து, துருக்கியின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, குர்து படைகளுக்கு …

Read More »

நியூயார்க்கில் கொதித்தெழுந்த இம்ரான் கான்!

உலகின்

அமெரிக்கர்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா? நியூயார்க்கில் கொதித்த இம்ரான் கான் 9 லட்சம் ராணுவத்தினருக்கு காஷ்மீரில் என்ன வேலை? எப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறதோ? அதன்பிறகு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் எனக்கு ஏமாற்றமளித்துள்ளது என்று அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் …

Read More »

பிரான்ஸ் நாட்டில் #MeToo புகார் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

பிரான்ஸ்

#MeToo பிரசாரம் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு பிரான்ஸ் நாட்டில் #MeToo பிரசாரத்தை முன்னெடுத்தவரும், ஆண் ஒருவர் மீது துன்புறுத்தல் புகார் அளித்தவருமான சான்ரா முல்லருக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இழப்பீடாக அவர் 22 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளிக்க வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முன்னாள் மேலதிகாரியான எரிக் ப்ரியோன் மீது புகார் அளித்திருந்தார். தன்னை அவர் பாலியல் ரீதியாக தன்னிடம் வழிந்துகொண்டிருந்தார் …

Read More »

சௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது

தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் ஏவுகணை சிதறல்களை ஆதாரமாக காட்டியுள்ள செளதி அரேபியா, கடந்த வார இறுதியில் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரானின் பங்கு இருப்பதை இது காட்டுவதாக தெரிவித்துள்ளது. 18 ட்ரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகள் ஏவப்பட்ட திசை ஏமனுக்கு இதில் தொடர்பில்லை என்று காட்டுவதாக சௌதி தெரிவித்துள்ளது. இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி …

Read More »

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி!

மோடி

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியர்கள் மத்தியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், செப்டம்பர் 22ல் ஹூஸ்டன் நகரில் ஹலோ மோடி என பொருள்படும் ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் அமெரிக்க …

Read More »

டிரம்புக்கு ஆப்பு வைப்பார்களா அமெரிக்கர்கள்..??

சிரியா அதிபரை

அதிபர் தேர்தலில் அதிகமானவர்கள் டிரம்பிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், மீண்டும் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் யார் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளது என அமெரிக்கர்களிடம் ராஸ்மூசன் என்ற நிறுவனம் கருத்து கணிப்பு …

Read More »

நாசாவுக்கு செல்லும் மதுரையைச் சேர்ந்த டீக்கடைகாரரின் மகள்..

நாசா

மதுரையை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் நாசா விண்வெளி மையம் செல்கிறார். மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியை சேர்ந்த ஜாபர் உசேன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயாரின் பெயர் சிக்கந்தர் ஜாபர். இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்ட தான்யா …

Read More »

சூறாவளியை அணுகுண்டால் தடுக்க யோசனையா?

சூறாவளி

சூறாவளிகளை அணுகுண்டுகளை பயன்படுத்தி தடுக்க முடியுமா? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டதாக ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆஃப்ரிக்க கடலோர பகுதியில் உருவாகும் சூறாவளிகள், அட்லாண்டிக் கடல் மீது நகர்ந்து வரும்போது, சூறாவளியின் மையப் பகுதியில் அணுகுண்டு வீசி தடுக்க முடியுமா? என அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளதாக அந்நாட்டின் இணையதள ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இது குறித்து டிரம்ப் தரப்பிலிருந்து …

Read More »

அமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர்

அமெரிக்கா

அனுமதி இல்லாத பகுதியில் எரிபொருள் கொண்டு சென்றதாக ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த இரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி விடுதலை செய்தது ஜிப்ரால்டர். எனினும் அந்த இரானிய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஜிப்ரால்டர் நீதிமன்றம் ஒன்று நேற்று உத்தரவிட்டதையும் மீறி அக்கப்பலைக் கைப்பற்ற அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரின் அதிகாரிகளிடம், கப்பலில் உள்ள எரிபொருள் சிரியாவுக்கு செல்லாது என இரான் எழுத்து …

Read More »

விமான கழிவறையில் கேமரா வைத்த நபர்: அதிர்ந்து போன பயணிகள்

விமான

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் கழிவறையில், கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் பயணிகள் அதிர்ந்து போயினர். அமெரிக்காவின் சான் டெய்கொவிலிருந்து ஹாஸ்டன் வரை சென்றுகொண்டிருந்த யூனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில், ஒரு பெண் பயணி ஒருவர் கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது கழிவறையின் உள்ளே ஒரு ஓரத்தில் ஒரு வித்தியாசமான கருவி தென்பட்டுள்ளது. அந்த கருவியில் ஒரு புள்ளி அளவிலான ஒளி அமந்து அமந்து எரிந்துள்ளது. சந்தேகப்பட்ட பெண் பயணி, அந்த கருவியை கைப்பற்றி …

Read More »