Wednesday , October 17 2018
Home / Tag Archives: azhagiri

Tag Archives: azhagiri

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் சென்னையில் அமைதிபேரணி நடத்திய மு.க.அழகிரி அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு மாவட்ட …

Read More »

சென்னையில் இன்று அமைதிப்பேரணி: சாதிப்பாரா அழகிரி

சென்னையில்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்று மு.க.அழகிரி விரும்பினாலும், அதற்கு மு.க.ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருப்பதால் தனது பலத்தை நிரூபிக்க செப்டம்பர் 5ல் அமைதிப்பேரணி நடத்தப்படும் என அறிவித்தார். இந்த அமைதிப்பேரணியில் திமுகவின் உண்மையான விசுவாசிகள் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அழகிரி அறிவித்ததால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அமைதிப்பேரணி நடைபெற நேற்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டது. …

Read More »

செய்தியாளர்களை விரட்டியடித்த அழகிரியின் ஆதரவாளர்கள்

செய்தியாளர்களை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியின் வீட்டில் ஆதரவாளர்கள் வரும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தனது வீட்டின் முன்னே செய்தி சேகரிக்க நின்றிருந்த செய்தியாளர்களை விரட்டினர். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ள அழகிரி, இந்த பேரணி மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றால் பத்திரிகையாளர்களின் …

Read More »

பேரணிக்கு முழுவீச்சில் இறங்கிய அழகிரி

பேரணிக்கு

செப்டம்பர் 5-ஆம் தேதி நடக்கவுள்ள பேரணியை லைவாக ஒளிபரப்ப அழகிரி அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார். கருணாநிதி மரணமடைந்த சில நாட்களிலேயே கட்சி ரீதியிலான பிரச்சினையை கிளப்பிய அழகிரி, தன் பின்னால் திமுக தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் வரை இருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் திமுகவுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அவர் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதியின் சமாதி உள்ள மெரினா …

Read More »

என்னை சேர்க்காவிடில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி

என்னை சேர்க்காவிடில்

திமுகவில் மீண்டும் என்னை சேர்க்காவிட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என மு.க.அழகிரி எச்சரித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின், வரும் ஆக.28ம் தேதி கூடவிருக்கும் திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடவுள்ளனர். இதனிடையே, வரும் செப்.5ம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தனது அடுத்தக்கட்ட …

Read More »

அழகிரியின் பிளானால் ஆட்டம் காணும் திமுக

திமுகவில் அழகிரியை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியும் அமைதியாக இருந்ததால் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க பிரச்சனை இருக்காது என்றே அனைவரும் கருதினர். ஆனால் மு.க.அழகிரி திடீரென தனது ஆதங்கத்தை திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்த்தால் அது கருணாநிதி எடுத்த முடிவுக்கு எதிராக இருக்கும் என்பதால் திமுக மூத்த தலைவர்கள் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அழகிரியை பகைத்து கொண்டு …

Read More »

திமுகவில் அழகிரி கேட்கும் பதவி என்ன தெரியுமா?

அழகிரி

கருணாநிதி மறைவிற்கு பின்னர் திமுக தலைவர் பதவியை விரைவில் ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலின், அந்த பதவிக்கு போட்டியும் எதிர்ப்பும் வராமல் இருக்க மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைத்து அவருக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதேபோல் கனிமொழிக்கு திமுக பொருளாளர் பதவி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவிக்கு பதிலாக மாநில அளவிலான ஒரு பதவி …

Read More »

திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி?

நானும் சொல்வேன்

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய …

Read More »

கருணாநிதி உடலில் தேசிய கொடி

கருணாநிதி உடலில் தேசிய கொடி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை அடுத்து திமுகவினர்களின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு முழு அரசு மரியாதை தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சற்றுமுன் கருணாநிதியின் உடல் மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டது. அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு தேசிய கொடி போர்த்தியபோது திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷமிட்டனர். மேலும் கருணாநிதியின் மறைவினை ஒட்டி …

Read More »

ஆபத்தான கட்டத்தை தாண்டிய அதிசயம்: திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி

ஆபத்தான கட்டத்தை தாண்டிய

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏறபட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த காவேரி மருத்துவமனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் போராடும் குணமுள்ள கருணாநிதி, மருத்துவர்களுக்கு கொடுத்த ஒத்துழைப்பால் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து திமுக தொண்டர் ஒருவர் கூறியபோது, ‘கருணாநிதியைப் போலவே, அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடும், வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் …

Read More »