Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: dead

Tag Archives: dead

சேலம் கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்பு

சேலத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் தெரு முழுவதும் ஆறு போல தண்ணீர் ஓடியது. இந்நிலையில், சேலம் நாராயணநகர் பகுதியில் 4 மாணவர்கள் சினிமா பார்த்துவிட்டு தங்களின் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையை கடந்த போது முகமது ஆசாத் என்ற மாணவன் …

Read More »

மது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி

சிவகாசியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்த 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம்(15), முத்தாட்சிமடத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தனர். குடித்துமுடித்து விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் …

Read More »

முன்னாள் தென் கொரிய அதிபர் கிம் ஜாங் பில் மரணம்!

தென் கொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் பில் சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 92. கிம் ஜாங் பில் முதுமை சார்ந்த நோய்களால் சில வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கிம் ஜாங் பில் இன்று சிகிச்சை …

Read More »

மகன் கண் முன்னே துடிதுடித்து இறந்த பெற்றோர் – கதறித் துடித்த மகன்!

சாலை விபத்தில் தன் மண் முன்னே பெற்றோர் துடிதுடித்து இறந்ததைப் பார்த்து மகன் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் வின்செண்ட். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ரிச்சர்டு என்ற மகன் உள்ளார். ரிச்சர்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சரவணம்பட்டியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ரிச்சர்டும், அவரது பெற்றோரும் …

Read More »

மகள் இறந்த துக்கத்தில் தாயும் மரணம்

மகள் இறந்த துக்கத்தில் அவரது தாயாரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது மகள் கோவிந்தம்மாள். கோவிந்தம்மாளுக்கு திருமணமாகி தனது கணவன் பூபதியோடு சேர்ந்து பீடி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கோவிந்தம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபத்தில், கோமா நிலைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தம்மாளை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு …

Read More »

காடுவெட்டி குரு மரணம் – 100 அரசுப்பேருந்துகள் மீது தாக்குதல்

பாமக முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு காலமானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் எம்.எல்.வுமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 25-ந்தேதி காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு அரசியல் …

Read More »

ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 9 பேர் பலி

தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலருக்கு மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட வன்முறை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ‘போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க …

Read More »

படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 40 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. 40 பயணிகளுடன் அந்த படகு தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி …

Read More »

செல்பி மோகம் – உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்

பாகிஸ்தானில் பாலம் மீது செல்பி எடுத்த போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் …

Read More »