Home / Tag Archives: eps

Tag Archives: eps

ஞான பழத்திற்காக மோடியை சுற்றி வரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்

ஈபிஎஸ்-ஓபிஎஸ்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் நிலை அதள பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்று மண்ணை கவ்வியுள்ள நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கவலைக்கிடமாக உள்ளது. அதனால் இப்போதே மாவட்ட, வார்டு பொறுப்பாளர்களை சந்தித்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டனர். ஆனால் பொறுப்பாளர்களோ அவர்களுடைய ஆதரவு அமைச்சர்களை அரியாசனம் ஏற வைப்பதில் …

Read More »

மதுசூதனன் உடல்நலக்குறைவு – அப்போல்லோவில் அனுமதி !

மதுசூதனன்

அதிமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரான மதுசூதனன் நெஞ்சுவலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக பழம்பெரும் உறுப்பினர்களுள் ஒருவரும் தற்போதைய அதிமுகவின் அவைத்தலைவருமான மதுசூதனன் உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை 7 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை அண்ணா சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுசூதனன் பலமுறை அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் …

Read More »

இடைத்தேர்தலுக்கு பின் ஆட்சியா ? ஆட்சிக்கலைப்பா ?

திமுக தலைவர் ஸ்டாலின்

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக ஆட்சி அமைக்குமா அல்லது ஆட்சியைக் கலைத்து தேர்தல் நடத்த விரும்புமா என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தலில் பெரும்பாண்மை பெற்று அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக முயற்சி செய்து வருகிறது. இது சம்மந்தமாக பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் ‘தமிழக …

Read More »

தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை

தலைமை

புதிதாக நிறுவப்பட உள்ள ஜெயலலிதா சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து புதிய சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரு சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டு சிலைகள் செய்யும் பணிகள் ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் …

Read More »

தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா?

தர்மயுத்தமா

தினகரன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் திட்டமிடப்பட்டதாகவும் தினகரன் பரபரப்பு செய்திகளை வெளியிட்டார். இது குறித்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ’தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், தினகரன் மனம்விட்டுப் பேச வேண்டும் எனக் கூறியதால் அரசியல் நாகரிகம் கருதி சென்றதாகவும் கூறினார். மேலும் தினகரன் ஆட்சியைக் கலைத்துவிட்டு தான் முதல்வராக வேண்டும் என்ற …

Read More »

அதிமுகவில் விரிசலா ? – ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் விரிசலா

சமீபகாலமாக அதிமுகவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தகுந்த அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் எனவும் செய்திகள் வெளியானது. அதை நிரூபிக்கும் விதமாக எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர் ஜெயக்குமாருக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மோதல் …

Read More »

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

இப்போது உங்களுக்கு சந்தோஷமா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியே கசிந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். என்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் …

Read More »

யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது – முதல்வர் திட்டவட்டம்

இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனாலும், நீதிமன்றத்தை நாடி இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என …

Read More »

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறாரா ஈபிஎஸ்? அரசு விழாவுக்கு அழைப்பு இல்லை

அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக இருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக மாறிவிட்டாலும், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு தரப்பினர்களும் இதனை மறுத்தனர். ஒன்றுபட்ட அதிமுக அதிக பலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். சமீபத்தில் கூட ஜெயலலிதா நினைவு மண்டப பூஜையில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவில்பட்டியில் இன்று நடைபெறும் அரசு விழா ஒன்றின் அழைப்பிதழில் ஓபிஎஸ் …

Read More »