Wednesday , October 17 2018
Home / Tag Archives: kanimozhi

Tag Archives: kanimozhi

கீழ்த்தரமான அரசியல்: கடம்பூர் ராஜூவுக்கு கனிமொழி பதிலடி

கீழ்த்தரமான

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் கூறியதற்கு ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கருணாநிதி நினைவிடம் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு விளக்கத்தை வெளியிட்டார். இந்த விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார். சென்னை …

Read More »

ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்த ஸ்டாலின்

ராஜாத்தி அம்மாள்

இன்று காலை நடந்த பொதுக்கூட்டதில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் அக்கட்சி பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதை திமுகவினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் மரணத்திற்கு பின்னர் தயாளு அம்மாள் மற்றும் ராஜாத்தி அம்மாள் என இரு குடும்பங்களும் நெருக்கத்துடன் பழகுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இன்று ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் கோபாலபுரம் …

Read More »

திமுகவில் அழகிரி கேட்கும் பதவி என்ன தெரியுமா?

அழகிரி

கருணாநிதி மறைவிற்கு பின்னர் திமுக தலைவர் பதவியை விரைவில் ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலின், அந்த பதவிக்கு போட்டியும் எதிர்ப்பும் வராமல் இருக்க மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைத்து அவருக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதேபோல் கனிமொழிக்கு திமுக பொருளாளர் பதவி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவிக்கு பதிலாக மாநில அளவிலான ஒரு பதவி …

Read More »

திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி?

நானும் சொல்வேன்

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய …

Read More »

திமுக தொண்டர்கள் ஊருக்கு செல்லலாம்: கனிமொழி

திமுக தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று கருணாநிதி படுக்கையில் இருந்து நாற்காலியில் உட்கார்ந்ததாகவும், அவரது உடல்நிலை முன்னேற்றத்தை கணக்கில் கொண்டால் இன்னும் ஒருசில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் …

Read More »