Thursday , December 13 2018
Home / Tag Archives: m.k.stalin

Tag Archives: m.k.stalin

ஸ்டாலினை ஏற்கிறேன் : மனம் மாறிய அழகிரி

ஸ்டாலினை ஏற்கிறேன்

திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்கிறேன் என அழகிரி கூறிய விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகிரியை திமுகவில் சேர்த்துக்கொள்ளும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. எனவே, தன்னுடைய பலத்தை காட்டும் வகையில், திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் …

Read More »

காவிகளே ஒன்று கூடுங்கள்

காவிகளே ஒன்று கூடுங்கள்

திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இன்று திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அந்த விழாவில் பேசிய போது “இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” எனக்கூறியிருந்தார். இந்நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் …

Read More »

என்னை சேர்க்காவிடில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி

என்னை சேர்க்காவிடில்

திமுகவில் மீண்டும் என்னை சேர்க்காவிட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என மு.க.அழகிரி எச்சரித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின், வரும் ஆக.28ம் தேதி கூடவிருக்கும் திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடவுள்ளனர். இதனிடையே, வரும் செப்.5ம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தனது அடுத்தக்கட்ட …

Read More »

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுகவில் அழகிரியை சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. திமுகவில் அழகிரி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்பதுதான் தற்போது பெரும்பாலோரின் கேள்வியாக இருக்கிறது. ஊடகங்கள் மற்றும் செய்திதாட்களில் இது தொடர்பான செய்திகளே அதிகம் விவாதிக்கப்படுகிறது. திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி அதன்பின் நிரந்தரமாகவும் நீக்கப்பட்டுவிட்டார். கடந்த 5 வருடங்களாக அவர் திமுகவில் இல்லை. இந்நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு திமுகவில் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்துள்ளது. …

Read More »

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

இப்போது உங்களுக்கு சந்தோஷமா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியே கசிந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். என்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் …

Read More »

தீர்ப்பு கேட்டு கண்ணீர் விட்ட கை கூப்பிய மு.க.ஸ்டாலின்…

திமுக தலைவர் ஸ்டாலின்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு திமுக செயல்தலவரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்ணீர் வடித்தனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் …

Read More »

கதறி அழுத ஸ்டாலின் ; கோஷமிட்ட தொண்டர்கள் : கோபாலபுர உணர்ச்சி நிமிடங்கள்

திமுக தலைவர் கருணாநிதியை

திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது திமுக செயல் தலைவர் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் விட்ட காட்சி பலரையும் கலங்கடித்தது. வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் …

Read More »

கருணாநிதியின் உடல்நிலை : கவலையில் மு.க.ஸ்டாலின்?

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே வருவதாகவும், இதனால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ …

Read More »

கருணாநிதி பதவியை கைப்பற்றும் ஸ்டாலின்: திமுகவில் அதிரடி மாற்றங்கள்

திமுகவை தோற்றுவித்த அண்ணா மறைந்தபின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பதவியில் மு.க.ஸ்டாலினை அமர வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், அதனுடன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், திமுகவுக்கு புத்துணர்வு கொடுக்க முடிவு செய்துள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் தலைவர் பதவியை தனக்குரியதாக்க முடிவுசெய்துள்ளதாக …

Read More »

ரஜினியின் குரல் யாருடையது?

தூத்துக்குடி போராட்டம் குறித்த ரஜினியின் குரல் அவருடையதுதானா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருமே சமூக விரோதிகள் என ரஜினி கூறியதாகவும், போராட்டம் …

Read More »