Home / Tag Archives: tamilnews

Tag Archives: tamilnews

டிரம்பை எதிர்த்து களம் காண்கிறாரா மைக்கேல் புளூம்பெர்க் ?

மைக்கேல் புளூம்பெர்க்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருகிறது, இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார்? ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் பிரபல தொழில் அதிபரும், அமெரிக்காவின் 9-வது மிகப்பெரிய பணக்காரருமான 77 வயதான மைக்கேல் புளூம்பெர்க் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் களம் காண …

Read More »

102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி

மூதாட்டி

நாகப்பட்டிணத்தில் மூதாட்டி ஒருவர் 102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து வருமானம் ஈட்டி வருகிறார். வயது மூப்புக்கு ஓய்வு கொடுத்த அவரின் உழைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆயங்குடிபள்ளம் கிராமத்த்தை சேர்ந்தவர் நீலாம்பாள். ஓலை குடிசையில் வசித்து வரும் நீலம்பாளுக்கு 17 வயதில் திருமணம் நடந்தது. அம்மை நோயினால் சிறுவயதிலேயே கணவரை இழந்த விட இரண்டு மகன்கள் மற்றும் மகளை பழ வியாபாரம் செய்து தனியாளாக …

Read More »

நான்கு ஆண்டுகளாக உப்பு நீரை குடிக்கும் கிராம மக்கள்

கிராம மக்கள்

கடலூரில் உள்ள பாசர் கிராமத்தில் உப்பு நீரைக் குடித்துவரும் மக்கள், திமுக எம்.எல்.ஏ தங்களைக் கண்டுகொள்ளாததால், தமிழக அரசு சுத்திகரிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்… கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாசர் கிராம மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக உப்புத் தன்மையுள்ள நீரையே குடித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மணல் அடுக்குகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நிலத்தடி நீர் …

Read More »

பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

பசுமைப் பட்டாசு

தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் தீபாவளியை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி பகுதியில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள எல்லப்பன்பேட்டை, ஆடூர், வீனங்கேணி, சத்திரம் ஆகிய கிராமங்களில் தமிழக அரசு அனுமதி பெற்று பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பட்டாசு தொழிலை நம்பி, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் தீபாவளிப் …

Read More »

அப்துல் கலாமின் 88 வது பிறந்த தினம் இன்று

அப்துல் கலாம்

தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்து, இந்தியாவின் அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய அப்துல் கலாமின் 88 வது பிறந்த தினம் இன்று. 1930 அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம், அங்குள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். படிக்கும் போதே தன்னுடைய சகோதரருக்கு உதவியாக பகுதி நேரத்தில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். பள்ளிப்படிப்பிற்கு பிறகு, திருச்சி “செயின்ட் …

Read More »

செயற்கை முறையில் இறைச்சி கண்டுபிடித்த அலெஃப் ஃபார்ம்ஸ்

இறைச்சி

அலெப்ஃப் ஃபார்ம்ஸ் (Aleph Farms) என்ற உணவு தொழில்நுட்ப நிறுவனம், செயற்கை இறைச்சியை உற்பத்தி செய்திருக்கிறது. இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அலெப்ஃப் ஃபார்ம்ஸ் நிறுவனம், இறைச்சிக்காக எந்த உயிரினங்களையும் கொலை செய்யாமல் சுற்றுசுழலுக்கு பாதிப்பில்லாமல் இறைச்சிகளை வளர்க்கும் தங்களுடைய முயற்ச்சியில் முதல் படியை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ரஷ்யாவின் பயோ பிரிண்டிங் நிறுவனத்துடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் பசுவிலிருந்து சில …

Read More »

மாமல்லபுரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

சுற்றுலா

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பட உள்ளனர். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த சீன அதிபர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரின் வருகையையொட்டி கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூணன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் …

Read More »

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

நீட்

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் கண் கருவிழி, கைரேகை பதிவுகள் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, சில மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது அம்பலமாகி …

Read More »

பசுமைப் பட்டாசு அறிமுகம்

பசுமைப் பட்டாசு

பசுமைப் பட்டாசுகளை மத்திய அரசு அறிமுகம் செய்ததற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பசுமை பட்டாசுகளை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்வோம் என்று குறிப்பிட்ட அவர்கள் பசுமை பட்டாசுகள் தொடர்பாக தொடர் ஆய்வு நடத்திய சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் …

Read More »

பிச்சை எடுத்து கோடீஸ்வரியான லெபனான் பெண்

லெபனான் பெண்

லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிச்சை எடுப்பதன் மூலம் 6 கோடியே 30 லட்ச ரூபாய்க்கு சமமான தொகையை சேர்த்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. லெபனான் நாட்டில் உள்ள பழமையான நகரம் சிடோன். இங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் வாசலில் ஹஜ் வாபா முகமது அவத் என்ற பெண்மணி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிச்சை எடுத்து வந்தார். இவரை மருத்துவமனையினரும் நன்றாகவே நடத்தினார்கள். இப்படியாக …

Read More »