Breaking News
கொரோனா இல்லாத நாடாக மாறிய தைவான்!

கொரோனா இல்லாத நாடாக மாறிய தைவான்!

கொரோனா இல்லாத நாடாக மாறிய தைவான்!

சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை உயர தொடங்கிய ஜனவரி மாதமே தைவான் தனது எல்லைகளை மூடியது. பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்தது. இன்னமும் எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அப்படியே வைத்துள்ளது.

முன்கூட்டியே எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இது என்கிறார்கள். அது தவிர நிபுணர்கள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் கண்டிப்புடன் அமல்படுத்தியது.

தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்தது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் சம்பந்தப்பட்ட 150 பேர் வரை தனிமைப்படுத்தியது. அனைவருக்கும் அரசால் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.

உள்ளூர் அளவில் தைவானில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதனால் எச்சரிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

Today rasi palan – 30.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 30, 2020)

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …