Breaking News

தமிழ் கவிதைகள்

இங்கே

இங்கே

இங்கே ———– எங்கட ஊருக்கு திரும்பினோம் யுத்தத்தில் தப்பி பிழைத்தவர் மட்டும் கண்மூடிக்கிடக்கிறது வயல்வெளி குண்டடிபட்டு கிடக்கிறது பலாமரம் படித்த பள்ளியும் கும்பிட்ட கோவிலும் இடிந்து கூவையும் கோட்டானும் தான் எஞ்சி வாழ்கின்றனவோ எங்கோ சத்தமிட்டு கேட்கின்றது சொத்திநாய் ஒன்று தெருவில் கிடந்து ஊளையிடுகின்றது ஒரு இறுதி ஊர்வலம் போகிறது விரல் விட்டு எண்ணத்தக்க அளவினருடன் வாழ்க்கையில் அர்த்தம் தொலைஞ்சு போச்சு வீசுகின்ற காற்றுக்கும் விடும் மூச்சிற்க்கும் இடையே பெரிய …

Read More »

ஞாபகப் பூக்கள்

ஞாபகப் பூக்கள்

ஞாபகப் பூக்கள் வன்னிமண்ணில் வாழ்ந்த நாட்கள் விழிகளுள் நிழலாடுகின்றது.. பள்ளிக்கூடத்தின் கதிரைகளில் இருந்த பொழுதுகளில் விட பங்கருக்குள் இருந்த பொழுதுகள் அதிகமானவை.. தண்ணீரில் குளித்த நேரங்களை விட “புக்காரவுக்கும்,கிபீர்க்கும்” பயந்து வியர்வையில் குளித்த நாட்கள்… நீண்டவை…. கரும்பலகைகளை பார்த்து படித்ததில்லை வானத்தை பார்த்தே படித்திருக்கின்றோம் காதில் செவ்வரத்தம் பூ வைத்து வரும் நண்பனும் கூவி வந்த எறிகணையில் விழிமடல் மூடிப்போன தோழியின் குறும்புகளும் மனதோரம் நினைவின் நிழல்களாய்… ஆடிப்பாடிய பள்ளிமுற்றமும் …

Read More »

வைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல்

இருந்து

வைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல் கொரணாவே உன்னோடு முரண்பட எனக்கு விருப்பமில்லை உன்னோடு சிலமணிநேரம் பேச விரும்புகின்றேன்.. எனக்கு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவு இருக்கிறது பிரமன் எம்மை படைத்தார் நாம் வாழ்வதற்க்கு என்று.. ஏன்? வைரஸ்சாய் வந்து அழிக்கிறாய்.. நாம் வசதியானவர்கள் அல்லர் ஏழ்மையோடும் சந்தோசமாக வாழ நினைப்பவர்கள் இப்படி நீ எங்கள் மண்ணில் தாண்டவமாடுவாய் என்று நினைத்திருந்தால் அன்றே கடவுளிடம் கேட்டிருப்போம் …

Read More »

மக்கள் கூட்டணி

மக்கள் கூட்டணி

மக்கள் கூட்டணி மக்கள் கூட்டணி மலரட்டும் ஈழர்கள் வாழ்வெனி திக்கெட்டும் வேர்பரப்பும் திறன் மிக்க செயலணி. மக்கள் கூட்டணி – இது தமிழ்தேசிய மக்கள் கூட்டணி. (மக்கள் கூட்டணி) உரிமைகள் மீட்க ஆணி சேர்வோம் தமிழர்கள் வறுமை போக்க அணி சேர்வோம் இழி நிலமை மாற்றும் அணி சேர்வோம் இணைவோம் தமிழர்கள் அணி சேர்வோம். கடந்ததை மறப்போம் இழந்ததை மீட்போம் காலத்தை உணர்ந்து கைகோர்ப்போம். (மக்கள் கூட்டணி) கட்சிகள் அனைத்தும் …

Read More »

“விதியும் நம் கையிலே…..”

விதியும் நம் கையிலே

“விதியும் நம் கையிலே…..” நம் வாழ்க்கை நம் கையிலே நாளை என்பது நிச்சயமில்லை நன்மை செய்வதே முக்கியமானது நலம் வாழ நல்வாழ்த்துக்கள் உறவுகள்…. உடம்போ சுடுகின்றது உள்ளமோ வாடுகின்றது தலையும் சுற்றாமல் சுற்றுகின்றது வாயும் அதிகம் புளிக்கின்றது இதயமும் அதிகமாய்த் துடிக்கின்றதே…. சுவாசிக்க முடிகின்றது வாசிக்க முடியவில்லை தலையும் வலிக்கின்றதே…. இதுதான் அழகிய காய்ச்சலோ…. முடியவில்லை உறவுகளே…. உடலிலே மாற்றம் ஏற்பட்டவுடனே உடனடியாக வைத்தியரை நாடுவதே உடலுக்கும் உள்ளத்திற்கும் சிறந்து …

Read More »

மலர்ந்த மலர்கள்

மலர்ந்த மலர்கள்

“மலர்ந்த மலர்கள்….” மலர்ந்த மலர்களையே மலர்மாலை தொடுத்தே மனமார விற்கையிலும் மதியையும் விதி வெல்லுதே…. வயிற்றுப் பசியிலே வழியின் ஓரமாய் வாடியே தூங்கிவிட்டேன் வழிநடத்த ஆட்களின்றி…. பதினாறு செல்வங்களை படைத்த இறைவனும் பாதியும் தராமலே பரிதவிக்க ஏன் விட்டாயோ….. இறைவனும் படைத்தானே இவ்வுலகில் வாழ்ந்திடவே இளமையில் வறுமையும் இனிமையான விசமாகுதே…. வாடிக்கையாளரோ சிலர் – ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களோ பலர்…. மாறுமோ தலைவிதி மன்னன் மாறினாலும்….. குறிப்பு :- வலிகளைச் …

Read More »

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா வெளிச்சம் போட்டுக் காட்டியது வெட்டி பந்தா தேசத்தினை தோல்வியென்று சொல்வதற்கு நான்கு நாட்கள் ஆனதிங்கே நாங்கள் இறங்கி செய்திருந்தால் பிஞ்சுப் பிள்ளை வந்திருப்பான் நீங்கள் வந்த பிறகு தானே நூறடிக்கு சென்றுவிட்டான் உங்கள் பிள்ளை விழுந்திருந்தால் ஊளையிட்டு ஓடிவரும் ஊரெல்லாம் கூடிவிடும் எங்கள் பிள்ளை விழுந்ததாலே எடுக்காம நடிக்கிறீங்க மணியன்கலிய மூர்த்தி

Read More »

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம் அம்மா இருக்கேண்னு ஆறுதல் நீ கூறினாயே ஆசப்புள்ள குழிக்குள்ள அழுகையோடு நீ வெளிய என்ன தாயி பாவஞ்செஞ்ச இப்படி ஓர் பிள்ளைப்பெற ஆண்பிள்ளை பெற்றெடுத்து ஆழ்கிணறில் கொடுத்துட்டியே சுரந்த பால் சொல்லியழும் சொந்த மகன் எங்கேவென சொந்தமெலாம் கூடியழும் சின்னப்புள்ள போயிட்டானேன்னு பசுமாடும் கிடை ஆடும் கூட்டுக்கோழி கூட வந்து தோழனெங்கே கேட்கும்போது என்ன சொல்லி தேத்த போற. நாங்க என்ன பாவஞ்செய்தோம் ராப்பகலா அழுதுகொண்டே …

Read More »

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

கண்ணீர் விட்டு கதறுகிறேன் பத்து மாசம் சுமந்து பெத்த பாசத்தாயி கதறுறா பாசங்கொடுத்து பறிகொடுத்த பாவிதந்தை அழுவுறான் அழுது புலம்பும் அண்ணன் அங்கே என்ன செய்ய எம்புதல்வா ஏக்கத்தோடு காத்திருந்தோம் ஏமாற்றி போய்விட்டாயே நீயில்லா வீடு நிலமில்லா வீடு நீயில்லா பொழுது நிரைகனவு பொழுது நீயில்லா வாழ்வு எப்படி நான் போகப் போறேன் நீ குடிச்ச பால்புட்டி பரிதவித்து நிக்கிதடா நீ நடந்த கால் தடங்கள் அழியாம இருக்குதடா எஞ்செல்லம் …

Read More »

“விடை கூறாயோ இறைவா….”

"விடை கூறாயோ இறைவா...."

“விடை கூறாயோ இறைவா….” அகிலத்தைப் படைத்தே அதிலே புதைத்து நீயும் அமைதியாய் இருப்பதேனோ…. அம்மா அழுவதும் கேட்கவில்லையே…. பூமாதேவி தாயே உன்னையே கண்ணீரோடு கேட்கின்றேன் உன் மடியில் கவனமாகச் சுமந்தே பெற்றெடுத்த அன்னையிடமே மீட்டுக் கொடுத்துவிடு…. மீண்டும் இதுபோல் நடக்காமல் என்றும் விழித்திருங்கள் உறவுகளே…. இன்றைய நிலைமை இனிமேலும் வேண்டாம்…. தாய் மடிமீது மீண்டும் சேய் பிரசவிக்கப் பிரார்த்தனை செய்கின்றோம் இறைவா…. மீண்டும் மீட்டுக் கொடுத்துவிடு….  

Read More »