Breaking News
தமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில், மேலும் 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 26 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 97 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 614 – ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 129 பேர் குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர்களின் எண்ணிக்கை மூன்றே கால் லட்சத்தை தாண்டிவிட்டது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 278 பேர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். கோவையில் புதிதாக 387 பேரும், கடலூரில் 370 பேரும், திருவள்ளூரில் மேலும் 320 பேரும்,செங்கல்பட்டில் 306 பேரும் , சேலத்தில் 273 பேரும், காஞ்சிபுரத்தில் 226 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …