Breaking News

தமிழர்களின் விடயத்தில் திணறுகின்றார் கோட்டா!

வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் உட்பட தமிழ் மக்களின் பல விடயங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திணறிக் கொண்டிருக்கின்றார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து வந்தார். ஆனால், வடக்குக்கு இதுவரை ஆளுநர் நியமிக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்துக்கு ஆளுநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் புதிய ஜனாதிபதியைத்தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்.

வடக்கு ஆளுநர் விடயம் உட்பட தமிழ் மக்களின் பல விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய திணறிக் கொண்டிருப்பது தெரிகின்றது. ஆகவே, அவர் தனக்குரிய ஒருவரை முதலில் ஆளுநராக நியமிக்கட்டும்” – என்றார்.

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …