Monday , October 22 2018
Home / TamilFood / ராகி பக்கோடா எப்படி செய்வது
ராகி பக்கோடா எப்படி செய்வது

ராகி பக்கோடா எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – 100 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கவும்),
இஞ்சி – ஒரு துண்டு (நசுக்கவும்),
பச்சை மிளகாய் – 4 (நசுக்கவும்),
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – கால் கிலோ, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கேழ்வரகு மாவு, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.

Check Also

கத்தரிக்காயை வாங்கி சமைப்பது தான் ஆரோக்கியமாம்

நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை …