தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

மொட்டுகளை பூத்து குலுங்க விடுங்கள், நசுக்கி விடாதீர்கள்… கண் கலங்கிய தமிழிசை

பெண் பூக்களை பூத்து குலுங்க விடுங்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என கூறி விட்டு குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையாக பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலை தாண்டி, பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும்? என கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புன்னகையுடன் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்புவது நடக்காத விஷயமாக இருக்கிறது என்றும் பெண்களுக்கு தற்காப்புத் கலை கற்றுதர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சமூகத்தை திருத்த அனைவரும் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், தயது செய்து பூக்களை பூத்து குலுங்க விடுங்கள், மொட்டுகளை கனிய விடுங்கள், அதை நசுக்கி விடாதீர்கள் என கண்ணீர் மல்கினார்.

[poll id=”2″]

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

Tags
Show More

Related Articles

Back to top button
Close