Breaking News
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …