Breaking News
மெரினாவில்

மெரினாவில் கருணாநிதிக்கு இடமில்லை: தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவை அடுத்து ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும், பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே கருணாநிதி உயிரிழந்த பிறகு அவரது உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என பலர் கூறி வந்தனர். அதற்கேற்றார் போல் திமுகவும் தமிழக அரசிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் அதனை ஏற்க தமிழக அரசு மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், பல சட்ட சிக்கல்கள் இருப்பதாலும் அந்த இடத்தை தமிழக அரசால் ஒதுக்க முடியவில்லை. அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …