Breaking News

தமிழர்கள் சிங்களப் பொது மக்களுடன் எந்தவித கோப தாபம் அற்றவர்கள்

தமிழர்கள் சிங்களப் பொது மக்களுடன் எந்தவித கோப தாபம் அற்றவர்கள்

வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழ்ந்தபடியாலேயே 1958 ஆம் ஆண்டிலும் 1983 ஆம் ஆண்டிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வடக்கு கிழக்கிற்கு கப்பல்களில் அனுப்பப்பட்டதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பேசு மொழி தமிழே சிங்களம் அல்ல என்றும் எந்தக் காலப்பகுதியிலும் வடக்கு கிழக்கில் பெருவாரியாக சிங்களவர்கள் வாழ்ந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள், அனுராதபுரத்திலும் பொலனறுவையிலும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து வந்துள்ளார்கள்.

தாம் சிறுவயதில் அனுராதபுரத்தில் இருந்த காலப்பகுதியில் பல தொழில் ஸ்தாபனங்கள் தமிழர்களுக்குரியதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்

17 வருடங்களாக ஒரு தமிழரே நகரசபை முதல்வராக இருந்தார்.

பண்டாரநாயக்க காலத்தில் பழைய நகரம் வேண்டுமென்றே கைவிடப்பட்டு புதியதொரு நகரம் அங்கு கட்டப்பட்டு தமிழர்கள் பழைய நகரத்தில் இருந்து விரட்டப்பட்டு சிங்களவர்கள் பெருவாரியாக அனுராதபுரத்தில் தற்போது வாழ்ந்து வருவதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போதும் பெரும்பான்மை தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

ஆகவே தற்போது தனி நாடாக இருக்கும் வடக்கு கிழக்கை தமது பிரத்தியேகப் பிரதேசம் என்று தமிழ்ப் பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு உள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1987 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசம் என்று கூறப்பட்டது.

இந்த உண்மையை இலங்கை அரசாங்கம் ஏற்றே கையெழுத்திட்டது.

18 வருடங்கள் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டே இருந்து வந்தன.

பின்னர் தனிநாட்டுச் சிந்தனையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும் என்று பிரதமர் எப்படி கூறமுடியும்? என சி.வி.விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தனிநாடு கோரவில்லை.

தம்மைத் தாமே ஒரே நாட்டினுள் ஆள விட வேண்டும் என்றே கோருகின்றார்கள்.

அவர்கள் வாழ்க்கையில் சிங்கள அரசியல்வாதிகள் உள்நுழைவதை விரும்பவில்லை.

தமிழர்கள் சிங்களப் பொது மக்களுடன் எந்தவித கோப தாபம் அற்றவர்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Today rasi palan – 02.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 02, 2020)

About அருள்

Check Also

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு! கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழந்துள்ளதுடன் 40 …