Breaking News
தொடர்ந்து ஏமாற்றம் அடையும் குவைத் வாழ் தமிழர்கள்

தொடர்ந்து ஏமாற்றம் அடையும் குவைத் வாழ் தமிழர்கள்

தொடர்ந்து ஏமாற்றம் அடையும் குவைத் வாழ் தமிழர்கள்

வந்தே பாரத் திட்டத்தின் ஜூன் 10 முதல் ஜூலை 1 வரையிலான பட்டியலில் குவைத்தில் இருந்து ஒரு சிறப்பு விமானம் கூட தமிழகதிற்கு இடம்பெறவில்லை…

இந்திய அரசின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் “வந்தே பாரத் ” திட்டத்தின் மூன்றாவது கட்டமாக அறிவிப்பில் எந்தெந்த நாடுகளுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படும் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு விமானம் கூட இடம்பெறவில்லை என்பது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது..

குவைத்தில் தற்போது நமக்கு தெரிந்த வகையில் கர்ப்பிணி பெண்கள், அவசர மருத்துவ உதவி, வயது முதிர்ந்தவர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தற்போது வரை குவைத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஒரே சிறப்பு விமானம் மட்டுமே தமிழகத்திற்கு சென்றுள்ளது.. அதன் பிறகு தற்போது வரை ஒரு விமானம் கூட தமிழகதிற்கு இடம்பெறவில்லை..

மத்திய, மாநில அரசுகள் அவசர தேவைகளுக்காக தாயகம் செல்ல நினைக்கும் குவைத்தில் இருக்கும் தமிழர்களை உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவைத் வாழ் தமிழர்கள் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Today rasi palan – 05.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 05, 2020)

இலங்கை முக்கிய செய்திகள் 05/06/2020

About அருள்

Check Also

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக …