Breaking News

கோட்டாவைத் தமிழர் நிராகரித்தமை சரியே!

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காமல் விட்டமை சரியான தீர்மானம் என்பதை தேர்தலுக்குப் பின்னரான அவரது செயற்பாடுகள் ஊர்ஜிதம் செய்கின்றன.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ். நகரிலுள்ள தனது அலவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலுக்குப் பின்னரான சூழ்நிலை இப்போது சற்றுத் தெளிவாக வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஐபக்‌ஷ தன்னுடைய அரசியல் தத்துவங்களைச் சிறிது சிறிதாக வெளிப்படுத்தி வருகின்றார்.

அதிலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாக அவர் கூறத் தலைப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பார்க்கின்றபோது எமது மக்கள் அவருக்கு வாக்களிக்காமல்விட்டது மிகவும் சரியான தீர்மானம் என்பது இப்போது ஊர்ஜிதம் செய்யப்படுகின்றது” – என்றார்.

கோட்டாவைத் தமிழர் நிராகரித்தமை சரியே!

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …