Sunday , July 15 2018
Breaking News
Home / Poems / தமிழ்த்தேசம்

தமிழ்த்தேசம்

பனைமரங்கள் எழுந்துநின்று
வாழ்த்தி வரவேற்க்கும்
ஈழதேசம்

வங்கக் கடல் அலைகள்
ஆர்ப்பரித்து அன்பு அலைகளாய்
முத்தமிடும் நேசம்

ஊர் எங்கும் செந்தமிழ்
சிந்தி உணர்வு எங்கும்
பொங்கும் தமிழ்த் தேசம்

பல வளம் கொண்டு
வந்தாரை வாழவைக்கும்
நற்தேசம்

மாவும் பலாவும் வாழையும்
ஓங்கி வளர்ந்து நிறைவுதரும்
பசுமைத் தேசம்

யாருக்கும் விலைபோகா
பண்டாரவன்னியன் பரம்பரை
வாழ்ந்த வீரத்தேசம்

ஆ.முல்லைதிவ்யன்

Check Also

எங்கே?எங்கே? தேடுகின்றேன்

கிளிகள் வந்து கீச்சிடும் முற்றத்து மாமரத்தை தேடுகின்றேன் ஏறி இறங்கி விளையாடிய ஆலமரத்தை தேடுகின்றேன் முற்றத்தில் அழகாய் பூத்துநின்ற செவ்வரத்தையை …