Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / சேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்!
தர்ஷன்

சேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

மக்களின் அனுதாப அலைக்காக சேரனும் கவினும் நடிப்பதாக தர்ஷன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வருகிறது.

இறுதியாக வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்படுவார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் அதிக புள்ளிகளை பெறுகிறாரோ அவரே இறுதிச் சுற்றுக்கு நேரடியாக செல்லும் டிக்கெட்டைப் பெறுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது வரை தர்ஷன் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் டாஸ்க் ஒன்றின் போது, சுய சிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்துகொண்டு வாழும் நபராக கவின் பெயரைக் கூறும் தர்ஷன், மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பிரபலங்களாக இயக்குநர் சேரனையும், கவினையும் கூறுகிறார். இதையடுத்து இதற்கான காரணத்தை பிக்பாஸிடம் விளக்கம் கேட்க முயல்கிறார் சேரன்.

கடந்த வாரங்களில் கண்ணீரும், காதலும் மட்டுமே இருந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் டாஸ்க்குகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

ப.சிதம்பரம்

சிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares ப.சிதம்பரம், 43 நாள்கள் சிறை வாசத்தில் 5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் …