உலக செய்திகள்முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு

அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நிகழ்த்திய பயங்கர துப்பாக்கிசூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் எல் பசோ பகுதியில் பிரபலமான வால் மார்ட் வணிக வளாகம் அமைந்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி காலை 11 மணி அளவில் வணிக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளனர்.

இந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நிகழ்ந்துள்ள துப்பாக்கிச்சூடு மிகவும் மோசமானது என்றும், இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி வருகவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு துணை நிற்கும் என்றும், கடவுள் அனைவருடனும் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close