Breaking News

பயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு நேர்க்காணலொன்றை வழங்கியுள்ளார்.

இதில் , தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தாக அவர் டெய்லி மேய்ல் பத்திரிக்கைக்கு குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 7.30 மணியளவில் தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு தனது நலன் தொடர்பில் விசாரித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி , கண்டி பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் அவர் செப்பு தொழிற்சாலையொன்றின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு கோழைத்தனமான தாக்குதலுடன் தனது கணவர் தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பில் முன்னரே அறிந்திருந்தால் , அது தொடர்பில் காவற்துறைக்கு அறிவித்திருப்பேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , சங்ரில்லா உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தனது கணவரின் சகோதரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மேய்ல் பத்திரிக்கைக்கு குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …