விளையாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

டெஸ்ட் போட்டியில், சரிவில் இருந்து மீண்ட தென் ஆப்பிரிக்க அணி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் டீன் எல்கரின் அபார சதத்தால், தென் ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 502 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்நிலையில், தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரும், கேப்டன் டுப்பிளஸிசும் நிதானமாக விளையாடினர்.

டுப்பிளஸிஸ் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய டீன் எல்கர் சதம் அடித்து அசத்தினார். 160 ரன்கள் எடுத்திருந்த போது அவர் ஆட்டமிழந்தார்.

மற்றொரு வீரர் டி காக்கும் தன் பங்கிறகு சதம் அடித்து 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், தென் ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது.

மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

Tags
Show More

Related Articles

Back to top button
Close