தமிழ்நாடு செய்திகள்

தேனி செந்தில் ஆண்டவர் திருக்கோவில் தைப்பூச உற்சவ விழா

தேனி செந்தில் ஆண்டவர் திருக்கோவில் தைப்பூச உற்சவ விழா

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள ராஜேந்திரன் நகரில்

மிகப்பழமை வாய்ந்த செந்தில் ஆண்டவர் திருக்கோவில் தைப்பூச உற்சவ விழா திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.செந்தில் ஆண்டவர் , வள்ளி ,தெய்வானையுடன் வெள்ளி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தமிழ் மாதம் தை மாசம் முருகனுக்கு உகந்த மாதமாகும் இந்த மாதத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நாளில் இங்கு மூன்று நாட்கள் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் திருவிழாவில் பக்தர்கள் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .

வள்ளி தெய்வானை திருமண நிகழ்ச்சியும், இரண்டாம் நாளான்று பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை காவடி பால்குடம் முடி எடுத்தல் பொங்கல் வைத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தியும் மூன்றாம் நாளான இன்று சிறப்பு ரதத் தேரில் உற்சவர் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்தார்.

பின்னர் முன்பு முளைப்பாரிகள் நவ தானியங்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .

பூஜை முடிந்தபின் ஊர் பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் வரை வடம் பிடித்து தேரை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.ஊர்வலம் செல்லும் வழியில் பொதுமக்கள் சிறப்பு பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டபோது 50 ஆண்டுகளுக்கு முன்பு கொத்தாளமுத்து என்பவரிடம் கனவில் வந்து எனக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறியதாக பொதுமக்கள்தெரிவித்தார்கள்மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மூன்று நாள் நடைபெற்ற திருவிழாவில் அன்னதான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக பொதுமக்கள் செய்திருந்தனர்.

தேனியில் வர்த்தக நிறுவனம் திறப்பு விழா

மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close