Monday , December 17 2018
Home / Cinema News / தளபதிக்கு போட்டியாக குட்டி தளபதி: சினிமாவில்
தளபதிக்கு போட்டியாக

தளபதிக்கு போட்டியாக குட்டி தளபதி: சினிமாவில்

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் விஜய் நடித்துள்ள முதல் குறும்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் விஜய்க்கு போட்டியாக அவரது வீட்டில் இருந்து அடுத்த நாயகன் உருவாகியுள்ளார். விஜய்யின் மகன் சஞ்சய் விஜய் தனது படிப்புகளுக்கு இடையே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தின் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலுக்கு அப்பாவுடன் சேர்ந்து அவரது ஸ்டைலில் குத்தாட்டம் போட்டு அசத்தியவர் சஞ்சய் விஜய். தற்போது 18 வயதாகும் சஞ்சய், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஜங்ஷன்’ என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த குறும்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சினிமாத்துறைக்குள் ரீ-எண்ட்ரி கொடுக்கும் சஞ்சய் விஜயை, தளபதி ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

சஞ்சய் விஜய் மட்டுமல்ல விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில், க்ளைமேக்ஸ் காட்சியில் அப்பாவுடன் சேர்ந்து தெறி பேபி சொல்லி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Check Also

இந்திய

என்னது ரூ.1000 கோடியா…? 2.0 கலெக்‌ஷன் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாணட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2.0 திரைப்படம் நவம்பர் மாதம் …