Breaking News
Home / த‌மிழக‌ம் / தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினருக்கு இந்த செய்தியை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தால் தஞ்சை கடற்பகுதி மீனவர்களிடையே பெரும் பதட்டம் எழுந்துள்ளது.

மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் வருகை தர உள்ள நிலையில் தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .

மேலும் கடற்கரையோர கிராமங்கள் மற்றும் கடலில் மீன் பிடிக்கும் படகுகள் இதுதவிர படகு இறங்கு தளங்கள் ஆகியவற்றில் ரகசிய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் ஆகியவற்றிற்கு மீன்பிடிக்க செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து மீனவ கிராமங்களிலும் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர் .

இதுதவிர ஏற்கனவே கடலுக்குச் சென்று தங்கு கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் அதாவது மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற உதயா,இளஞ்சியன், கனகராஜ் ஆகியோர் ஒரு படகிலும்

நாகை மாவட்டம் சீத்தான்குப்பம் கிராமத்திலிருந்து மல்லிப்பட்டினம் கல்லிவயல் தோட்டத்தில் தங்கி மீன்பிடிக்கும் சரவணன், ரெத்தினமணி, முருகன், மற்றொரு மீனவர் ஆகியோர் வேறொரு படகிலும் சென்றுள்ளனர். ஆக இரண்டு நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினருக்கு இந்த செய்தியை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தால் தஞ்சை கடற்பகுதி மீனவர்களிடையே பெரும் பதட்டம் எழுந்துள்ளது.

இது தவிர தங்கு கடலுக்கு சென்ற மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்ப கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் மீன்வளத் துறையினர், மீனவர்களின் உறவினர்கள் அந்தந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …