Breaking News

தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், எஸ்.சிவாமோகன், க.கோடீஸ்வரன், ஞா.சிறீநேசன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர மேயர் இ.ஆனோல்ட், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா. எஸ்.ஜே.இம்மானுவேல், தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலை ஆயர் வணக்கத்துக்குரிய ஜெபநேசன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …