Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் செயல் – வைரமுத்து கண்டனம்
பாரதிராஜா மீது வழக்குப்பதிவு

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் செயல் – வைரமுத்து கண்டனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் செயல் – வைரமுத்து கண்டனம்

இயக்குனர் பாரதிராஜா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்‌த ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா பேசியபோது இந்து கடவுள் வினாயகர் குறித்து அவதூறாகப் பேசியதாக‌ கூறப்பட்டது. இதுகுறித்து இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் காவல்நிலையத்தில்‌ புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் புகார்தாரர் நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்ற உத்தவுபடி பாரதிராஜா‌ மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனப்பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.

 

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

கீழடி

கீழடி தொல் தமிழரின் மேன்மை மிகு நகர நாகரீகம் தொடர்பான கண்காட்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கரூர் பரணி பார்க் பள்ளிக்கல்விக்குழுமத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கீழடி தொல் தமிழரின் மேன்மை மிகு …