கோட்டாவின் அராஜக ஆட்சியில் தமிழரைக் கட்டுப்படுத்த இராணுவத் தடைகள்!

கோட்டாவின் அராஜக ஆட்சியில் தமிழரைக் கட்டுப்படுத்த இராணுவத் தடைகள்!

“வடக்கில் தற்போது வீதிகளில் மீண்டும் தடைகள் போடப்பட்டுள்ளன. இராணுவம் நின்றாலும், இல்லை என்றாலும் அந்தத் தடைகள் உள்ளன. அவை வேகக் கட்டுப்பாடுகள் அல்ல. தமிழர்கள் மீதான கட்டுப்பாடு. கோட்டாபயவின் அராஜக ஆட்சியில் தமிழர்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்துகின்றார்கள் என்பதுக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் நேற்று நடைபெற்ற முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இப்போது நாங்கள் ஒரு இக்கட்டான நிலைமைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் என்ற பதம் அங்கு பாவிக்கப்படவில்லை.

மாவட்ட சபைக் கூட்டமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய முடிவின் மூலமே நினைப்பதைச் சாதிக்க முனைகிறார் என்று தெரிகின்றது.

அவர் செய்பவை குறித்து நாங்கள் நன்றாக யோசிக்க வேண்டியுள்ளது. அரசமைப்புச் சொல்கின்றது தமிழுக்கு அந்தஸ்து உள்ளது என்று. இங்கே அவர்கள் சொல்கின்றார்கள் சுதந்திர தினமன்று சிங்களத்தில்தான் தேசிய கீதம் என்று. பின்னர் ஏன் எங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எங்களுடைய பாட்டுக்கு விட்டு விடலாமே.

எங்களுக்கான உரிமைகளை வழங்கி எங்களை சரிசமமாக உங்களால் மதிக்க முடியாது என்றால், ஏன் உங்கள் பிரதிநிதிகளை இங்கே போடுகிறீர்கள். இது உங்கள் அராஜக ஆட்சியை வெளிப்படையாகக் காட்டுகின்றது.

அப்படித்தான் நாங்கள் யோசிக்க வேண்டும். மிகத் துணிவாக சிங்களம் மாத்திரம்தான் என்று அறிவிக்கின்ற துணிச்சல் அவர்களுக்கு இருக்கின்றது.

நீங்கள் சிங்கப்பூருக்குப் போனாலும், ஜப்பானுக்குப் போனாலும் அங்கெல்லாம் தமிழ் இருக்கின்றது. ஒரு சிறிய நாடாக இருந்தாலும், தமிழ்க் கலாசாரத்தைப் பேணுவதற்கு ஓர் இடம் அங்கு உண்டு. ஆனால், இவர்கள் பௌத்த தர்மம் பற்றிப் பேசிப் பேசி, அந்தப் பௌத்தம் என்ன சொல்கிறதோ, அதற்கு எதிரான செயற்பாடுகளை மற்றொரு இன மக்கள் மீது பயன்படுத்துகின்றாரகள். தங்களுடைய அசுரத்தனத்தைக் காட்டுகின்றார்கள்.

இப்போது நாங்கள் வீதிகளால் செல்லும்போது மீண்டும் எத்தனையோ வீதித் தடைகள் உள்ளன. எதற்காக அந்த வீதித் தடைகள் என்று எனக்குத் தெரியவில்லை.

அந்த வீதித் தடைகளில் இராணுவம் நிற்பதும் உண்டு, சும்மா தடைகளைப் போட்டு வைத்திருப்பதும் உண்டு. இது வேகக் கட்டுப்பாடல்ல, தமிழர் கட்டுப்பாடு. அவர்கள் தமிழர்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள்.

நீ இப்படித்தான் இருக்கலாம், இப்படித்தான் செல்லலாம் என்று எங்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள். இன்னும் சில நாள்களில் அப்படிப்பட்ட அரசின் பிரதிநிதிகள் என்று சிலர் எம் மத்தியில் வருவார்கள்.

மக்கள் மத்தியில் படிவங்களுடன் வருவார்கள். அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம், ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் தருகின்றோம், உணவு தருகின்றோம் என்பார்கள். அந்தப் படிவங்களை நிரப்பியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து விடும். கட்டாயம் வருவார்கள், ஆனால், மக்கள் துணிய வேண்டும். அவர்களை எதிர்க்க வேண்டும், ஏற்கனவே தருவோம் என்று கூறியதைத் தாருங்கள் என்று அவர்கள் முன் கேட்க வேண்டும்.

எங்களிடமே முதன்மை, எங்களுடைய அரசியல் உரிமை எங்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதுதான்.

அரசியல் உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும். அதே நேரத்தில், அபிவிருத்தியையும் சமாந்தரமாக நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் எங்களுடைய வேலைப்பாடுகள் நடக்கின்றன. அபிவிருத்தி இல்லாமல் இருந்தால், நாங்கள் எங்களுடைய கல்வியையோ, விளையாட்டையோ, ஒரு நிலைக்குக் கொண்டுவர முடியாது.

இன்றும் கூட நாங்கள் ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கின்றோம். வேறு நாடுகளைப் பார்த்தால் போர் நடைபெற்றால், போர் நடைபெற்ற பிரதேசங்களில் உள்ள மக்களைப் பற்றிச் சிந்தித்தார்கள், அவர்களுடைய கல்வி, பொருளாதாரத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், எங்களுடைய நிலை அவ்வாறு அல்ல. எல்லா விதத்திலும், வடக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்திலேயே இருக்கின்றது.

அது கல்வியோ, சுகாதாரமோ, விளையாட்டோ எதுவாக இருந்தாலும் ஒன்பதாவது மாகாணமாகவே எமது மாகாணம் இருக்கின்றது.

தமிழர்களுக்கென ஓர் ஆயுத பலம் இருந்தது. அந்தப் பலத்தை கள்ளங்கபடமாக மௌனிக்கச் செய்து, முறித்தெறிந்துவிட்டு, மீண்டும் தங்களுடைய அராஜக ஆட்சியை தமிழர்கள் மீது செலுத்த முனைகின்றார்கள். இதுதான் உண்மை. இதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

Tamil News
Tamilnadu News
World Tamil News

About விடுதலை

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …