Saturday , July 20 2019
Home / முக்கிய செய்திகள் / ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி
கோட்டாபய ராஜபக்
கோட்டாபய ராஜபக்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீதான வழக்குத் தாக்கலானது அவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சியாக அமையலாம் என அரசியல் பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதையில் இருந்து உயிர்பிழைத்த தமிழர் ஒருவரின் சார்பில் குறித்த வழக்கு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு படுகொலைச் செய்யப்பட்ட, சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இதனை பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல்

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …