Breaking News
கூட்டமைப்பில் மிகப்பெரிய விரிசல்..?

கூட்டமைப்பில் மிகப்பெரிய விரிசல்..?

கூட்டமைப்பில் மிகப்பெரிய விரிசல்..?

இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக் கொண்ட தேசியப்பட்டியலுக்கு தவராசா கலையரசன் தெரிவுசெய்யப்பட்ட விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த தேர்தலில் இலங்கை தமிழரசுகட்சியின் வீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் 9 ஆசனங்களை வென்றதுடன் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தையும் பெற்று கொண்டது.

தேசிய பட்டியல் ஊடாக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், நாடாளுமன்றிற்கு அனுப்பபடுவார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் அந்த இடத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தெரிவு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளெட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தேசியப்பட்டியல் உறுப்புரிமை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கூட்டமைப்பின் பங்காளி கட்சி ஒன்றின் தலைவர் தேர்தலில் தோல்வியடைவாராக இருந்தால் அவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்குவதில்லை என்ற கொள்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றுவதாகவும் அதனடிப்படையிலே கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை என எம்.ஏ சுமந்திரன் ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தவராசா கலையரசனின் பெயர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவிப்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் மேற்கொண்ட இந்த தீர்மானத்தில் அதிருப்தி கொண்டவர்கள் சுயாதீனமாக செயற்படுவது குறித்து சிந்தித்து வருவதாக கூட்டமைப்பின் பங்காளி கட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

இதேநேரம், தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களே தம்மை தோற்கடிப்பதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாக அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

நாடு திரும்பிய மேலும் 222 பேர்

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …