தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது சுஜித் விழுந்த கிணறு

குழந்தை சுஜித் விழுந்து உயிரிழந்த ஆழ்துளை கிணறு, கான்கிரீட் கலவையால் மூடபட்டது.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான்.

80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தன.

இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர்.

பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வருகை தந்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின் சுஜித்தின் உடல் உடனடியாக நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்குள்ள பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் நடந்தபோது, சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு, கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது.

இதையும் பாருங்க :

Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்

சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

Tags
Show More

Related Articles

Back to top button
Close