Wednesday , January 16 2019
Home / இலங்கை செய்திகள் / புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்து! – மஹிந்த எச்சரிக்கை

புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்து! – மஹிந்த எச்சரிக்கை

“தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது. இதைக் கொண்டுவருவதற்கு இந்த நாடாளுமன்றம் ஏற்புடையதல்ல.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“ஒரு இனம் மற்றுமொரு இனத்தை அடக்கி ஓடுக்கி மிதித்து ஆள முற்படக்கூடாது. நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் இக்கோட்பாடு பொருந்தும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது.

புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் முன்வைத்தார்.

அதன்பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பைக் கொண்டுவரும் தரப்பு கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது.

எனவே, இந்த விடயத்தில் மக்களின் நிலைப்பாடு என்னவென்பது அறியப்படவேண்டும். மாகாண சபைத் தேர்தல் கூட இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. எனவே, புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய சூழ்நிலை இதுவல்ல.

நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வோம். புதிய அரசமைப்பு தொடர்பில் நீங்கள் உங்கள் தரப்பு யோசனையை முன்வையுங்கள். நாங்கள் எமது தரப்பு யோசனையை முன்வைக்கின்றோம். மக்கள் முடிவெடுக்கட்டும். அதன்பின்னர் நாடாளுமன்றம் ஆராயட்டும்” – என்றார்.

Check Also

வாழைச்சேனையில் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் …