உலக செய்திகள்முக்கிய செய்திகள்

இரு தமிழர்களின் ஒருங்கிணைப்பில் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்பு

உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்த்து பார்த்து காத்திருக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் இன்று நடக்கிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாட்டையும், பாதுகாப்பையும் சிங்கப்பூர் அரசு செய்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பு, ஐநா.வின் பொருளாதார தடைகளை எதிர்கொண்ட போதிலும், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பகத்தில் மிகப்பெரிய போர் பதற்றத்தை ஏற்பட்டது.

நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியாவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முறியடிக்க, வடகொரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகள் எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கலாம் என்ற நிலை காணப்பட்டது.

சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் பாலகிருஸ்னன், சிங்கப்பூர் பதில் பிரதமர் தர்மன் சண்முகரட்ணம் ஆகியோர் முன்னிலை வகித்து ,இந்த பிரமாண்ட சந்திப்பில் கலந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலின் உச்சக்கட்டமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் நேரடி வார்த்தை போரும் நடைபெற்றது. கிம்மை டிரம்ப் ‘குள்ளன்’ என்று, டிரம்ப்பை ‘பைத்தியக்காரன்’ என்று கிம்மும் மாறிமாறி வசைபாடிக் கொண்டனர்.

‘வடகொரியாவை அடக்கி வைக்கவில்லை என்றால் ஈராக்குக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்’ என்று வடகொரியாவின் குருவாக விளங்கும் சீனாவிடம் டிரம்ப் முறையிட்டார்.

இதைத் தொடர்ந்து, கிம்மை சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டுக்கு அழைத்துப் பேசினார். அதன் பிறகு, வடகொரியாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தென்கொரியா நடத்திய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றனர்.

தென் கொரியாவின் எல்லைக்குள் சென்று அந்நாட்டு அதிபர் மூன் ஜேவுடன் கிம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close