Breaking News
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியது

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 921 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 91 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா, கடந்த 23-ந்தேதிதான் 30 லட்சம் கொரோனா நோயாளிகள் என்ற நிலையை எட்டியிருந்தது.

அடுத்த சில நாட்களில் 37 லட்சத்தை தொடும் நிலையை இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை எட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தொற்றை கட்டுப்படுத்த அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் மேலும் 819 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு மாண்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 288 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் நீடித்து வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலளிக்கும் விஷயமாகும்.

Today rasi palan – 02.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 02, 2020)

About அருள்

Check Also

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்து தலைமறைவான ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியர் போலீஸார் …