Breaking News
கைதிகளை அப்போதே விடுவித்திருக்க முடியும்

கைதிகளை அப்போதே விடுவித்திருக்க முடியும்

கைதிகளை அப்போதே விடுவித்திருக்க முடியும்

கடந்த அரசாங்கத்திடம் அதிகாரம் மிக்கவர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் அரசியல் கைதிகளை அப்போதே விடுவித்திருக்க முடியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இன்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான போராட்டத்தை இழிவுபடுத்துபவர்களை தமிழ் மக்கள் ஏன் தொடர்ந்தும் ஆதரிக்கின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …