Breaking News
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை

ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதனை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடை; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பது மற்றும் சோதிப்பதற்கான தடை: அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில் நுட்பங்களை மாற்றுவதற்கான தடை போன்ற கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.

அதேபோல் மற்ற நாடுகள் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பங்களை ஈரானுடன் பகிர்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடைகளை அமல்படுத்துவதற்கான கடமைகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் நிறைவேற்றத் தவறினால் அவற்றுக்கான விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்கும். ஒரு விரிவான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்கா ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தொடரும்.

எதிர்வரும் நாட்களில் ஐ.நா. பொருளாதார தடைகளை அமல்படுத்துவதை வலுப்படுத்தவும், அதை மீறுபவர்களை பொறுப்புக்கூற வைக்கும் பல கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …