Friday , January 18 2019
Home / த‌மிழக‌ம் / முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி எழுதிய பதில் கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே 142 அடி வரை நீர் தேக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து கேரளாவில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில் நீர்மட்டத்தை குறைக்க கேரளாவை சேர்ந்தவர் வழக்கு தொடுத்தார்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் 139 அடி வரை நீர் தேக்கலாம் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்கலாம் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியில் இருந்து 139 அடியாக குறைப்பது பற்றி பேரிடர் குழு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரையோர மக்களின் பாதுகாப்பை பேரிடர் குழு உறுதி செய்ய வேண்டும் என்றும், கேரளாவில் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Check Also

புதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்!

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். …