Breaking News
1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அறிவித்த விடயம்

1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அறிவித்த விடயம்

1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அறிவித்த விடயம்

கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 14.08.2020 அன்று காலை சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் அதன் அணுகுமுறைகளை வெவ்வேறாக முன்னெடுத்து செல்கின்றது.

அந்தவகையில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயம் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேநேரத்தில் இது தொடர்பாக நாட்டின் பிரதமருடைய கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்பு ஆரம்ப காலத்தில் சொன்னதை போல் எழுத்தளவில் மாடி வீடாக இருந்தாலும், (சிலப்) முறையிலான வீடுகளே அமைக்கப்படும்.

ஆனால் இந்திய வீடமைப்பை வைத்துக் கொண்டு நாம் அரசியல் செய்யப்போவதில்லை. வீடமைப்பு தொடர்பில் முன்னெடுக்கும் பணிகளை நீங்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைகழகம் அமையப்பெறவுள்ளது. இன்று கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார்.

அவரிடம் கலந்தாலோசித்துள்ளோம். ஆகையால் இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைகழகம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை உள்ளது.

வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட மாணவர்களை உள்ளடக்கியே இந்த தேசிய பல்கலைகழகம் அமையப்பெறும். அங்குள்ள இளைஞர்கள் மீதும் அக்கறை கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு : 414 பேர் கைது

இலங்கை முக்கிய செய்திகள் 14/08/2020 – Jaffna News Today | Srilanka News Tamil | World News Tamil

About அருள்

Check Also

Today rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 22, 2020)

Today rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 22, 2020)

Today rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 22, 2020)   இன்றைய …