Sunday , July 15 2018
Breaking News
Home / Headlines News / தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி கருத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி கருத்து

வடமாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரனை வெற்றியடைய செய்து மேற்கொண்ட சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பிள்ளையானை நியமித்திருந்தது, எந்த மக்கள் நலன் கருதியும் இல்லை.

ஆனால் முன்னாள் நீதியரசர் என்ற வகையிலும், கல்விமான் என்ற அடிப்படையிலும் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்து, வெற்றிபெற செய்திருந்தது.

ஆனால் இந்த சோதனை பாரிய அளவில் தோல்வியடைந்துள்ளது என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

இன்றைய ராசிப்பலன் – 16.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 16-07-2018, ஆனி 32, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.41 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மகம் …