Breaking News

மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்: தொப்புள் கொடியை துண்டிக்க மறுப்பு: தேனியில் பரபரப்பு சம்பவம்!

தேனியில் மனைவிக்குக் கணவரே வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி கருவுற்றதை அடுத்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார்.

இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுடைய கண்ணனின் செயலுக்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒரு வாரத்துக்கு முன்பு தன் நிறை மாத கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகியுள்ளார் கண்ணன்.

இந்நிலையில் நேற்று கண்ணனின் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட உறவினர்களும் ஊர் மக்களும் கண்ணனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

பிறகு நேற்று இரவு தனது மனைவிக்கு வீட்டிலேயே கண்ணன் பிரசவம் பார்த்துள்ளார். அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியைத் துண்டிக்க கண்ணன் மறுத்துள்ளார்.

இயற்கை முறை மருத்துவப்படி தொப்புள் கொடி ஒரு வாரத்தில் தானாக உதிர்ந்துவிடும் என்று தனக்கு தன் தாத்தா கூறியதாகக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவர்கள் சிலர் தொப்புள் கொடியை துண்டிக்காமல் விடுவது ஆபத்து என்று கூறியவுடன் தொப்புள் கொடியை துண்டிக்க அனுமதித்துள்ளார்.

தற்போது தாயும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் உள்ளார்கள். இருப்பினும் இதைக் கேள்வி பட்ட சுகாதாரத் துறையினர் கண்ணன் வீட்டிற்கு விரைந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதிக்க வலியுறுத்தியுள்ளனர்.ஆனாலும் கண்ணன் அதை விடாப்பிடியாக மறுத்துள்ளார்.

தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்க கண்ணன் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் கண்ணன் உள்ளிட்ட 3பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் வீடியோ உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால், அந்தப் பெண் உயிரிழந்தது,வீட்டிலேயே சுகப்பிரசவம் என்று விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது என இது போன்ற தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …