Breaking News
ஆளுநர் மீது

ஆளுநர் மீது நம்பிக்கை உள்ளது: பேரறிவாளன் தாயார்

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அவருடனான சந்திப்புக்கு பின்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறியே நிலவி வருகிறது.

இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம்.

அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஆராய்ந்து வருகிறார்.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ஆளுநரை சந்தித்து ஏழு பேரின் விடுதலை குறித்து முறையிட்டு மனு அளித்தார்.

மேலும், பேரறிவாளனின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஆளுநரிடம் அப்போது அவர் வலியுறுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளுநரை சந்தித்து ஏழு பேரின் விடுதலை கூறத்து மனு அளித்துள்ளோம்.

சிபிஐ அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம், தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆகியோர், 7 பேர் விடுதலை குறித்து தெரிவித்த கருத்துகளை சுட்டிக் கட்டியுள்ளோம்.

நாங்கள் அளித்த மனுவை ஆளுநர் முழுவதுமாக படித்தார். எங்களிடம் மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டார்.

இது தொடர்பாக விரைவில் கவனிக்கிறோம் என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

பரோலில் வந்த போது எப்படி நடந்து கொண்டாரோ அப்படியே பேரறிவாளன் நடந்து கொள்வார் என்றார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …