Breaking News
ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்ததில் பிழை ஏதும் இல்லை - சி.வி.விக்னேஸ்வரன்
சி.வி.விக்னேஸ்வரன்

ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்ததில் பிழை ஏதும் இல்லை – சி.வி.விக்னேஸ்வரன்

ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்ததில் பிழை ஏதும் இல்லை – சி.வி.விக்னேஸ்வரன்

அஹிம்சையில் நாட்டம் கொண்டவர்கள் என்ற முறையில் ஆயுதப் போராட்டத்தைக் குறை கூறவோ, கொச்சைப்படுத்தவோ எமக்கு எந்த உரித்தும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரபாகரன் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கோரியதைத் தான் முழு மூச்சுடனும் நம்பிக்கையுடனும் நடைமுறைப்படுத்தியதாக சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதைப் பிழையென்று கூற எமக்கு எந்த உரித்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய கால தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளில் “புனிதப் போர்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் குறித்த போர் அஹிம்சை வழியிலோ, சத்தியாக்கிரகம் மூலமோ, அரச தந்திரம் மூலமோ நடைபெற வேண்டும் என்று அடையாளப்படுத்தப்படவில்லை.

ஆகவே பிரபாகரன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்ததில் பிழை ஏதும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தமிழருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட அழைப்பு


About அருள்

Check Also

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …