திருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..?

திருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..?

திருமணமான தம்பதிகள் என்னதான் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, பார்ப்பவர்களுக்கு இவர்களை விட்டால் வேறு யாரும் இந்த மாதிர கணவன் மனைவி அமையவே முடியாது என்பார்கள்.. அந்த அளவுக்கு இருக்கும் நம் கண் எதிரே காண்பவை .. ஆனால் அடுத்த சில நாட்களிலோ.. மாதங்களிலோ… வருடங்களிலோ… அவ்வளவு ஏன் ஒரே இரவில் கூட திருமணமான தம்பதிகள் பிரிந்து செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது. அதற்கெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணம் இதுதான்.

1.உணர்ச்சி துண்டிப்பு

சில நேரங்களில் ஒரு ஜோடி ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக பேசிக்கொள்ள கூட நேரமில்லாமல் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் குறைய தொடங்கும். இதற்கு முக்கிய காரணங்கள் நேரமின்மை மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாதது.

உணர்ச்சி ரீதியாக இணைய வேண்டும், நீங்கள் பகிர வேண்டும், நீங்கள் பேச வேண்டும், நீங்கள் வெளிப்படுத்த வேண்டும், நீங்கள் கேட்க வேண்டும், நீங்கள் சிரிக்க வேண்டும், நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும், நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்ட வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், நீங்கள் எதையோ இழந்ததை போல ஓர் உணர்வுக்குள் செல்வீர்கள்
திருமணத்திற்கு
2. முக்கிய மதிப்புகள் மீதான கருத்து வேறுபாடுகள்

சில நேரங்களில் நீங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான சூழ்நிலையை அனுபவிக்கும்போது, ​​வாழ்க்கை பெரும் சோதனைக்குள்ளாகும். உங்கள் குடும்பத்திற்கு – குறிப்பாக உங்கள் துணைக்கு பிடிக்காத முடிவுகளை நீங்கள் எடுக்க நேரிட்டால் திருமண பந்தம் முறிய வாய்ப்பு உள்ளது

3. வாழ்க்கை முன்னுரிமைகள் வேறுபடுகின்றன

ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்டால், பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கை முன்னுரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காலப்போக்கில், இவை மிகவும் வித்தியாசமாகி ஒன்றாக வாழ்வதும், தினசரி விஷயங்களை கூட ஏற்றுக்கொள்வதும் கடினமாகிறது. இது போன்ற தருணத்தில் தன் மனம் போகும் போக்கில் வேறு ஒரு நபரை நாடி செல்ல நேரிடுகிறது

4. இருவருக்குள்ளும் ஒத்த கருத்து இல்லாமை

கணவன் மனைவி இருவருக்கும் பொதுவாக பிடித்த ஒரு விஷயம் இல்லாமல் இருக்கும். கணவனுக்கு வேறு ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கலாம். மனைவிக்கு அதே போன்று வேறு ஒரு விஷயத்தில் ஆர்வம் காண்பிக்கலாம். இதுபோன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் இருப்பதால் அவர்களுக்கு பொதுவான விஷயத்தை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. இதன் காரணமாக அவர்களுக்கு வேறு யாருடன் ஒத்துப் போகிறதோ அவர்களுடன் நட்பு பாராட்டி பின்னர் காதலாக மாறி, கள்ளக்காதலாக மாறி, விவாகரத்து ஏற்பட ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது
திருமணத்திற்கு
5.பணம் திமிரு மற்றும் வாழ்க்கையில் சலிப்பு..!

பணம் அதிகமாக வைத்திருப்பார்கள்….சில நேரங்களில் அவர்களுக்கு சலிப்பு ஏற்படும். இதன் காரணமாக சுவாரசியமாக இருக்கும் என நினைத்து ஒரு தேடுதல் ஏற்படும். இதன் காரணமாக வேறு ஒரு நபரை தேடி அவருடன் பழகி கள்ளக் காதலாக மாற வாய்ப்பு உள்ளது இதன் காரணமாக விவாகரத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ராஜிதவை கைதுசெய்ய முடியாமல் திணறுகின்றன பொலிஸ் படைகள்!

ஆழிப்பேரலையில் காவுகொண்ட உறவுகளை நினைந்துருகி சோகமயமானது தாயகம்!

About அருள்

Check Also

இளமை

இளமையை தக்கவைத்துக் கொள்ள அற்புத குறிப்புகள்…!

கீரை, புரோக்கோலி, தக்காளி, தர்பூசணி, திராட்சை, கொய்யா, கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பரிசி இவையெல்லாம் சருமம் காக்கும் உணவுப் பொருள்கள். ரிபோஃப்ளேவின், …