Saturday , July 20 2019
Home / விளையாட்டு / 13 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய திஸர!

13 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய திஸர!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேராவின் அதிடியையும் தாண்டி, நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் த்ரில் வெற்றிபெற்றுள்ளது. அத்துடன், ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

பே ஓல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோரின் அபார ஆட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர், பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திசர பெரேராவின் கன்னி தசம் மற்றும் தனுஷ்க குணதிலகவின் அரைச்சதம் அடங்கலாக 298 ஓட்டங்களைப் பெற்று, 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்த வரையில், முதல்போட்டியில் சதமடித்திருந்த மார்ட்டின் கப்டில், அணித் தலைவர் கேன்வில்லியம்சன் ஆகியோரது விக்கெட்டுகள் போட்டியின் முதல் 10 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

எனினும், கொலின் மன்ரோ மற்றும் ரோஸ்டெய்லர் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கி, ஓட்டங்களைகுவித்தனர்.

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் கொலின் மன்ரோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து, குசல் பெரேராவின் சிறந்த களத்தடுப்பின் மூலமாக ரன்–அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்தும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் அரைச்சதம் கடக்க, இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோலஸ், 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, 90 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரோஸ் டெய்லர் துரதிஷ்டவசமாக ரன்–அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் ஜேம்ஸ் நீஷம் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப் பெற்று, ரன்–அவுட் மூலமாக ஆட்டமிழக்க, இறுதியாக தனது பங்கிற்கு டீம் செய்பர்ட் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 319 ஆக உயர்த்தினார்

இலங்கை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, லசித் மாலிங்க 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக திஸர பெரேரா தெரிவானார்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

Check Also

சாம்பியன் ஆனது இங்கிலாந்து

சாம்பியன் ஆனது இங்கிலாந்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. …