Sunday , July 22 2018
Breaking News
Home / Uncategorized / கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவருக்கு மறியல் – திருமலை நீதிமன்று உத்தரவு

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவருக்கு மறியல் – திருமலை நீதிமன்று உத்தரவு

திருகோணமலை – மூதூர்ப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, 15 லீற்றர் வடிசாராயத்தினை வைத்திருந்த மூவரை விளக்கமறியலில் வைக்கு நீதிமன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரையும் இந்த மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

மூதூர், ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 21 வயதுடைய இருவரும் மற்றும் சந்தனவெட்டை, கட்டப்பரிச்சான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மூவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மூன்று சாராய பரல்கள், சீனி,மற்றும் குழாய் பட்டைகளும், 15 லீற்றர் வடிசாராயமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Check Also

காதலனை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு பலி கொடுத்த காதலி

ரஷ்யாவில் உள்ள ஒர்யோல் எனும் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது காதலனை கொன்று சாத்தானுக்கு அர்ப்பணித்த சம்பவம் அதிர்ச்சியை …