தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்,

கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

[poll id=”2″]

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/VLFDcUCsPW4

Tags
Show More

Related Articles

Back to top button
Close