Breaking News
இடியுடன் கூடிய மழையுடனான காலநிலை தொடரக்கூடும்

இடியுடன் கூடிய மழையுடனான காலநிலை தொடரக்கூடும்

இடியுடன் கூடிய மழையுடனான காலநிலை தொடரக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புத்தளம் முதல் மன்னார் மற்றும் கங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம, பொதுமக்கனை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, களுகங்கையின் நீர் மட்டம் மில்லகந்தை பகுதியில் தொடர்ந்தும் அவதான நிலையில் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் ஏனைய கங்கைகளின் நீர் மட்டம் சாதாரண நிலையில் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் முழு விபரம்

About அருள்

Check Also

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் - முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …